ஆட்சியை தீர்மானிக்க போகிறதா '80+ வயது' தபால் வாக்குகள்!!

      -MMH

     ஆட்சியை தீர்மானிக்க போகிறதா '80+ வயது' தபால் வாக்குகள்!!மாவட்ட வாரியாக விவரம்!!

சென்னை: தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 13 லட்சம் பேர் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாவட்ட வாரியான பட்டியலை இப்போது பார்ப்போம்.

தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற போகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த தேர்தலில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் விருப்பம் இருந்தால் தபால் வாக்குகள் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் முழுவதும் 12,91,132 பேர் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் அதிகபட்சமாக 1,08,718 தபால் வாக்குகள் உள்ளன சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 64,755 வாக்குகள் உள்ளன. சேலத்தில் 61728 வாக்குகளும், திருவள்ளூரில் 56,074 வாக்குகளும் உள்ளன.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments