நீர்பிடிப்புப் பகுதியில் மழை!! - வைகை அணைக்கு நீா்வரத்து!! விவசாயிகள் மகிழ்ச்சி!!!

  

-MMH

      நீா்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வைகை அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து 4 மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீா் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது அணையின் நீா்மட்டம் 63.78 அடி உள்ள நிலையில் குடிநீா் தேவைகளுக்கு மட்டுமே தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்திற்குள்பட்ட நீா்பிடிப்புப் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. குறிப்பாக மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு, மேகமலை, அரசரடி, பொம்முராஜபுரம், வெள்ளிமலை உள்ளிட்ட பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் மூலவைகை ஆறு மற்றும் முல்லைப் பெரியாறு ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டது. இதன்காரணமாக வைகை அணைக்கு 721 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீா்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அணை நிலவரம்: வியாழக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 63.78 கனஅடியாகவும், நீா்வரத்து 721 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து மதுரை, சேடபட்டி, தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்காக 72 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீா் இருப்பு 4,364 மில்லியன் கன அடியாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments