ம்ம்ம்.. என்ன!! பலூன் எல்லாம் பறக்குது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் தேர்தல் விழிப்புணர்வுக்காக பலுான் பறக்கவிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் 100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். கல்லுாரி மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஓட்டு பதிவு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.அதன் ஒரு பகுதியாக பஸ் ஸ்டாண்டில் தேர்தல் விழிப்புணர்வு பலுான் பறக்கவிடப்பட்டு உள்ளது.
பலுானில் தேர்தல் நாள் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.காற்றுக்கு ஏற்றபடி அசைந்தாடும் பலுானை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். வானில் பறக்கும் பலுானை பொதுமக்கள் தங்களது மொபைலில் படம் பிடித்தனர். தேர்தல் விழிப்புணர்வுக்காக பறக்க விடப்பட்ட பலுான் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்., பொள்ளாச்சி கிழக்கு.
Comments