கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்!!!

   -MMH
     திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு கோவை குனியமுத்தூர் பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


பகுதி செயலாளர் காஜா உசேன், அவர்கள் தலைமையில் கிளை நிர்வாகிகளும், மகளிர் அணியினரும்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் சிவசேனாபதி அவர்களுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்று விளக்கம் சொல்ல நடந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா மிக சிறப்பாக பலகருத்துகளை எடுத்துசொன்னார்.

கூட்டத்தில் கூட்டணிகட்சிகள் ம.ஜ.க , ம.ம.க , காங்கிரஸ் முஸ்லிம்லீக் , வி.சி.க இன்னும் பலகட்சி பொருப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர் !!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப்,தொண்டாமுத்தூர்.

Comments