தவறான தகவல்களை பரப்புவதை நிர்மலா சீதாராமன் நிறுத்திக்கொள்ள வேண்டும்!! - நடிகை டாப்ஸி

 

-MMH

          டந்த 3ஆம் தேதி வருமானவரி சோதனைக்குள்ளாகிய நடிகை டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவருக்கும் ஆதரவாக பொதுமக்கள் பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர், மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் - போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்தமைக்காகவே இத்தகைய நெருக்கடிக்குள்ளாக்கபடுவதாக கருத்துக்கள் எழும்பியது.

மேலும் அனுராக் மற்றும் டாப்ஸியும் தனித்தனியாக வருமான வரித்துறை சோதனை குறித்து டிவிட்டரில் பதிவிட்டனர் , அவைகள் டிரண்டும் ஆகியது .  இந்நிலையில்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : "கலைத்துறையினர் 2013ஆண்டிலேயே சோதனைக்குள்ளாகினர், அப்போது இவையெல்லாம் பெரிதாக்கபடவில்லை"  எனக் கூறியிருந்தார்.

இந்த பதிலை குறித்து கருத்துக்களை தெரிவித்த  டாப்ஸி "தான் 2013ஆம் ஆண்டு சோதனைக்குள்ளாக்க படவில்லை என்றும் தவறான தகவல்களை நிர்மலா சீதாராமன் பொதுவெளியில் பரப்புவது அதிர்ச்சியாகவும் - ஆச்சர்யமாகவும் இருந்தது ,இவ்வாறாக பொதுவெளியில் அவர் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

-நவாஸ்.

Comments