பொது மக்களுடைய குறைகளை தீர்க்கும் முகாம்!!

      -MMH
      பொள்ளாச்சி தபால் கோட்டத்தில் பொது மக்களுடைய குறைகளை தீர்க்கும் முகாம்  குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான முதல் குறை தீர்க்கும் முகாம் வருகின்ற 31 ஆம் தேதி புதன்கிழமை மதியம் 3 மணிக்கு பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து உடனடியாக தீர்வு காணலாம் மேலும் தபால் துறையில் உள்ள குறைகள் மற்றும் ஆலோசனைகள் தபால் வாயிலாக வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

எச்.இரவிச்சந்திரன், பொள்ளாச்சி கோட்ட தபால் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி-642001

மேலும் புகார் மற்றும் ஆலோசனை கடிதத்தின் மேல் 'தாக் அதாலத்' என தவறாமல் குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு. 

Comments