திருப்பத்தூர் அதிமுக வேட்பாளராக மருதுஅழகுராஜ்! சிங்கம்புணரி அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

 

-MMH

              சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட  அதிமுக செய்தித்தொடர்பாளர் மருதுஅழகுராஜ், மாவட்டசேர்மன் பொன்.மணி பாஸ்கரன், சிங்கம்புணரி ஒன்றிய பெருந்தலைவர் திவ்யாபிரபு, ஆவின் சேர்மன் அசோகன் ஆகியோர் விருப்பமனு அளித்திருந்தனர்.

நேற்று அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் திருப்பத்தூர் தொகுதிக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜை வேட்பாளராக அதிமுக தலைமை கழகம் அறிவித்தது. அதனை அடுத்து சிங்கம்புணரி ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் சார்பில் அண்ணாசிலை முன்பு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், சிங்கம்புணரி நகரச் செயலாளர் சொ.வாசு மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

-அப்துல் சலாம்.

Comments