மக்கள் நீதி மையம் கட்சியின் வால்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் நேர்காணல்!!

 

-MMH

   மிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக  தே. செந்தில்ராஜ் M.A., வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அவருடன் ஒரு சிறிய நேர்காணல்:

அரசியலில் உங்களுடைய பாதை எதை நோக்கி பயணிக்கும் ...?

பதில்-

மக்களுக்கு நேர்மையான ஊழியனாக மக்கள் சேவையில் இரவு பகல் பாராமல்  அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.

உங்களுடைய தொகுதிக்கு உங்களுடைய வாக்குறுதிகள் என்ன ...?

பதில்-

பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்கிட குரல் கொடுப்பேன்,

தேசிய தென்னை அபிவிருத்தி நலவாரிய செயல்பாட்டை மேம்படுத்துதல், ஆழியாறு பாசன விவசாயிகளின் நலன் காக்க ஒருங்கிணைந்த குழுவிடம் அதிகாரம் வழங்குவது, தென்னை நல வாரிய மானிய சலுகை பரவலாக அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, ஆனைமலை ஆறு, குடிநீர் சாக்கடை கலப்பு, அறிவியல்பூர்வ மாற்றுத் திட்டம்,  தூய்மையான குடிநீர் உறுதி செய்தல்.

தென்னை விவசாயம்-

கயிறு தொழிலை பாதுகாத்து மேம்படுத்துதல், உள்ளூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம், வீடற்ற மக்களின் வாழ்வுரிமை கிடைத்திட வீட்டுமனை பட்டா கிடைக்கச் செய்தல், உள்ளாட்சியில் கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம் செய்தல். மேலும் நல்லாட்சியை நிலையாக என்றும் மக்களுக்கு வழங்கிட நாங்கள் தயாராக இருக்கிறோம் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார்.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு


Comments