கோவையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மஜக மாவட்ட தலைமையகம் வருகை! துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர் அவர்களுடன் சந்திப்பு!

-MMH

               கோவை தெற்கு தொகுதியில்  திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நா.கார்த்திக், கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர் குறிச்சி பிரபாகரன்,  ஆகியோர் மஜக மாவட்ட  தலைமையகம் வருகை புரிந்தனர். அவர்களை துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிறகு நிர்வாகிகளிடம் பேசிய வேட்பாளர்கள் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் உங்களின்  ஆதரவால் நாங்கள் நிச்சயம்  வெற்றி பெற்று மக்கள் நல பணியாற்றுவோம் என்று நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, மற்றும் மாவட்ட அணிநிர்வாகிகள் அன்வர் மன்சூர் அன்சர் ஹனீப் வர்த்தகஅணி  நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் கிளைநிர்வாகிகள்  உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments