மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதிவேட்பாளர் அறிமுக கூட்டம்! - மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!!
கோவை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, அவர்கள் போட்டியிடுகிறார்.
அவரின் அறிமுக கூட்டம் கோவை செல்வபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய பகுதி பொறுப்பாளர் ஹனீப், அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து உரையாற்றினார்.
அவருடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுவனம் கமால்பாஷா, மத்திய பகுதி பொறுப்பாளர் இப்ராஹிம், 77வது வட்ட செயலாளர் பயாஸ், பொருளாளர் அலி, துணை செயலாளர்கள் பீர்முகம்மது, நவ்பல், 78வது வட்ட செய்லாளர் ஜாகிர், பொருளாளர் சுபைர், சமீர், மன்சூர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைவரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments