ஆலந்தூர் பகுதியில் ரயில் பாதையை கடக்க உயிரை பணையம் வைக்கும் மக்கள்..!!

-MMH

     லந்தூர் பகுதியில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான "நிதி மேல்நிலை" பள்ளியானது இப்பகுதியின் அடையாளமாக திகழ்ந்துக்கொண்டிருக்கின்றது. இப்பள்ளிக்கும் அருகிலுள்ள ஆதம்பாக்கத்திற்கும் இடையேயான செல்ல ரயில் இருப்புப் பாதையின் கேட்டினை  கடந்தே மக்கள் சென்றுவந்தனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதையானது அடைக்கப்பட்டு இரும்புக் கம்பிகளால் இழுத்து மூடப்பட்டது .இதனால் பொதுமக்களும் , பள்ளி மாணவர்களும் ஆதம்பாக்கம் செல்ல மிகவும் சிரமப்பட்டே வருகின்றனர், இதனால் சிலர் ரயிலில் அடிப்பட்டு இறக்கவும் , பலர் முடமாகியும் இருக்கின்றனர். 

இந்நிலையில் மக்களின் கோரிக்கையானது இருபுறமும் இலகுவாக கடக்க நடைமேம்பாலம் அமைத்து தரப்படவேண்டும்  என்பதே! கடந்த பத்தாண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக அன்பரசன் அவர்களும் , பத்தாண்டுகளாக ஆட்சியிலிருக்கும் அதிமுகவும் காதில்கூட போட்டுக்கொள்ளவில்லை, 

மக்களும்  பல்வேறு வகையில் அழுத்தங்களை கொடுத்தே வருகின்றனர், வரும் சட்டமன்ற தேர்தலிலும் இக்கோரிக்கையானது பிரதிபலித்திடவே செய்யும். இனிவரும் சட்டமன்ற உறுப்பினராவது செய்வாரா? என எதிர்ப்பார்ப்போம். 

-நவாஸ்.

Comments