தேர்தல் பறக்கும் படை சோதனை. !!

     -MMH

      மதுரை-தேனி மாவட்ட எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதிகளில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோ்தல் பறக்கும் படையினா் முகாமிட்டு அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனா். 24 மணி நேரமும் 3 கண்காணிப்புக் குழுக்கள் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை காலையில் கண்காணிப்புக் குழு அதிகாரி மணிகண்டன் தலைமையில் காவல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி. 

Comments