ஊடகங்களின் 'டீஆர்பி'க்காக தான் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டேன்!! - தீஷா ரவி!!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல உலக நாடுகளும் - சமூக ஆர்வலர்களும் ஆதரவு கருத்து தெரிவித்துவரும் நிலையில் பெங்களூரை சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் தீஷா ரவி கைது செய்யபட்டது மிகவும் பேசுபொருளானது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்ட தும்பர்க் உடைய 'டூல்கிட்' டினை வடிவமைத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த பிப்ரவரி 13 கைது செய்யப்பட்டு பிப்ரவரி 23 பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து டிவிட்டர் சமூக தளத்தில் கருத்து பதிவிட்ட தீஷா ரவி "நீதிமன்ற வளாகத்தில் எனக்கான வழக்கறிஞரை தேடிக்கொண்டிருக்கும் முன் ஐந்து நாட்கள் விசாரணைக்கு தள்ளப்பட்டேன், தங்களின் டிஆர்பி பசிக்காக என்னைப்பற்றியும் , என்னுடைய பணிகளை குறித்தும் அவதூறாகவும் - தவறாகவும் மீடியாக்களில் பேசும்படியானேன்" என கூறியுள்ளார்.
-நவாஸ்.
Comments