வைக்கோல் லாரி லைன் கம்பியில் உரசி தீ விபத்து!!
பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் கறவை மாடுகள் வளர்த்து பால் உற்பத்தி செய்வதை முக்கிய உப தொழிலாக செய்து வருகின்றனர்.
கறவை மாடுகளுக்கு தீவனம் மழைக்காலங்களில் தட்டுப்பாடின்றி கிடைத்துவிடுகிறது. அதேசமயம் கோடைகாலத்தில் கிடைப்பதில்லை தீவனப் பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோல் கொண்டு வருகின்றனர். அப்பொழுது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகளில் கொண்டு வருகின்றனர் வரும் வழித்தடங்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து உரிய இடத்திற்கு வந்து சேர்வதற்குள் ஒரு வழியாகி விடுகிறது.
இந்நிலையில் நேற்று லாரியில் வைக்கோல் கட்டு அளவுக்கதிகமாக ஏற்றிக்கொண்டு தமிழக கேரள எல்லைப் பகுதியான நெடும் பாறை மூலக்கடை பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது லைன் கம்பியில் உரசி வைக்கோல் தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவி வைக்கோல் கட்டுடன் லாரியும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments