கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!!!
கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அவிநாசி சாலையில் 10.10 கிலோமீட்டர் தூரத்துக்கு, 1,600 கோடி ரூபாய் செலவில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது.
இதற்கு 2020, டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து, இரவு பகலாக பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. இந்தநிலையில், நில உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல், முறையான விதிகளை பின்பற்றாமல் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சம்பந்தப்பட்ட மனுதாரரின் நிலங்களை மட்டும் கையகப்படுத்த தடை விதித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜூன் 22-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுநாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments