கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!!

 

-MMH

               கோவை அருகே அத்திப்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து இவர் சின்னமேட்டுப்பாளையத்தில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று முத்து தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைக ளுடன் ஒர்க் ஷாப்புக்கு சென்றார்.இரவு பணி முடிந்து திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் வாகனங்களின் ஆர்.சி.புத்தகங்கள், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments