சிங்கம்புணரியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு!
திருப்புத்துார் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜ் நேற்று சிங்கம்புணரிக்கு வந்தபோது கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மாவட்ட சேர்மன் பொன்.மணி பாஸ்கரன், சிங்கம்புணரி ஒன்றியத் தலைவர் திவ்யா பிரபு, ஆவின் சேர்மன் அசோகன் உள்ளிட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் மருது அழகுராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று தொகுதிக்கு வந்த அவருக்கு ஏரியூர், சிங்கம்புணரியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்டக்குழு தலைவர் பொன்.மணி பாஸ்கரன், அதிமுக வடக்கு ஒன்றியச்செயலாளர் திருவாசகம், பேரூர்கழக செயலாளர் வாசு, மற்றும் மகளிர், கழக ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் நன்றி கூறினார். அதன்பின் எஸ்.புதூர் பொதுமக்கள் நிர்வாகிகள் சந்திப்பிற்கு புறப்பட்டுச் சென்றனர்.
-அப்துல் சலாம்.
Comments