போண்டா சாப்பிடுவதை படம் பிடித்ததால் கோவம் !!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கே.கே.ஜி.திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு போண்டா மற்றும் எலுமிச்சம் பழம் ஜூஸ் வழங்கப்பட்டது.
இதனை தேர்தல் பறக்கும் படை குழுவினர் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து பதிவு செய்து கொண்டு வெளியே வந்தனர்.கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிகாரிகளை சூழ்ந்த தி.மு.க.,வினர் சிலர் 'நீங்கள் யார்; உங்களுக்கு இங்கு என்ன வேலை, இதையெல்லாம் ஏன் போட்டோ, வீடியோ எடுக்குறீங்க; அதிகாரிகளாக இருந்தால் அடையாள அட்டையை காட்டுங்க. இல்லையெனில், எடுத்த போட்டோ, வீடியோக்களை அழித்து விட்டு செல்ல வேண்டும்,' என்றனர்.
இதனை கேட்ட அதிகாரிகள், 'நாங்கள் அதிகாரி தான்; இது எங்கள் பணி,' என கூறினர். அதற்கு கட்சியினர் விட மறுத்தனர். அங்கு வந்த சில கட்சி நிர்வாகிகள், 'அதிகாரிகளை தடுக்க கூடாது; அவர்களை விடுங்கள்,' என கூறினர். இதனையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் ஏறிச் சென்றனர்.தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் கூறுகையில், ''பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியே, தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பு செய்வதாகும். அவர்கள் பணிகளை அரசியல் கட்சியினர் தடுக்க கூடாது. அவ்வாறு தடுத்தால் சட்டப்படி கடுமயைான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.
Comments