ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் பத்து ரூபாய் டாக்டர் குவியும் பாராட்டு..!!
இந்தக் காலத்தில் இப்படி ஒரு மருத்துவரா என்ற ஆச்சரியத்தில் மக்கள். ஆந்திரா மாநிலம் கடப்பா என்னும் பகுதியில் ஏழை மக்களுக்கு மிக மிக குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்க்கும் எம்பிபிஎஸ் மருத்துவ பெண்மணி நூரி பர்வீன்.
இன்றைய காலகட்டத்தில் நோய் என்றாலே பயம் வந்துவிடுகிறது. என்ன காரணம் என்றால் மருத்துவமனை சென்று மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் 500 லிருந்து 1000 வரை செலவாகும் நிலை உள்ளது. இதற்கு பயந்து நோயாளிகள் தங்களது வீட்டிலேயே தங்களுக்கு உண்டான வைத்தியத்தை பார்ப்பதும் உண்டு.
இதையெல்லாம் மாற்றும் வகையில் இந்த மருத்துவர் நூரி பர்வீன் கொரோனா காலத்தில் கூட இவரது பணி தொடர்ந்து நடைபெற்றது. என்பது மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது பணத்துக்காக இயங்கும் இந்த உலகத்தில் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இந்த மருத்துவர் நூரி பர்வீன் கடப்பா பகுதி மக்கள் பெரும் பாராட்டு மழையை பொழிந்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா, கிரி.
Comments