தஞ்சாவூர்-கும்பகோணம் அருகே பஸ், லாரி மோதி விபத்து!

 

-MMH 

                              தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பஸ் லாரி மோதல். கும்பகோணத்தை அடுத்துள்ள நாச்சியார் கோவில் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மிகவும் மோசமான நிலையில் விபத்துக்குள்ளாகி 5க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார், கும்பகோணம் - திருவாரூர் சாலையில் இடைநிலைப் பகுதியாக நாச்சியார் கோயில் சாக்கோட்டை - நாச்சியார்கோவில் சென்ற ஒரு தனியார் பேருந்து சாலையில் மிகவும் குறுகலாகவும் வளைவுகள் அதிகமாகவும் உள்ளதால், 

தனியார் பேருந்து பிரேக் பிடிக்காததால் வளைவில் முன்புறம் சென்ற லாரி மீது இடதுபுறமாக மோதியது. உடனடியாக அப்பகுதி மக்கள், சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர், வளைவுகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் சாலையில் செல்லும் வாகனங்கள் கவனமாக செல்லுமாறு அப்பகுதி மக்களும் போலீசாரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

-வினோத் குமார்,கும்பகோணம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments