பொள்ளாச்சி பல்லடம் சாலையில் வீணாகும் நீர்..!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலை நந்தனார் காலனி அருகில் 24 மணி நேரமும் குடிநீர் குழாய் இருந்து  நீர் வீணாகிறது. கோடை காலம் வந்த நிலையில் இப்படி நீர் வீணாவது பொது மக்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

உடைந்த குழாயை நகராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு விரைவில் சரி செய்யவேண்டும் என வாகன ஓட்டிகள், அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments