வால்பாறைக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்!! - பொதுமக்கள் கோரிக்கை..!

 

-MMH

       தமிழகத்தில் ஓரளவு அடங்கி இருந்த கொரோனா நோய் தொற்று  தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு 500 க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1000 தொடும்  நிலையில் உள்ளது.

நோய் தொற்று வேகமாக பரவி வரும் இந்நிலையில் வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, நகராட்சி, காவல்துறை, சுகாதார மையம், தாலுக்கா ஆபீஸ், வனத்துறை  உள்ளிட்ட முக்கிய  அலுவலகங்களில்  நோய்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் கொரோனா விழிப்புணர்வு மனு நேற்று வழங்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள செய்தி: 

நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் நோய் தொற்று தீவிரமடைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகயை தடுக்கக் கோரியும், அத்தியாவசிய தேவைக்கு வருபவர்கள் Epass பெற்று வர வேண்டும் என வலியுறுத்தியும், பொது இடங்களில் பொது மக்கள் முக கவசம் அணியவும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க உத்தரவிடக் கோரியும் வால்பாறை பகுதியில்     நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

-திவ்யாகுமார், வால்பாறை.

Comments