உ.பி. யில் தண்ணீர் குடிப்பதற்காக கோயிலுக்குள் சென்ற சிறுவனை அடிக்கும் வீடியோ வைரல்!!

     -MMH

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்ததிலிருந்து வெளிப்படையாகவே மதரீதியிலான நிந்தனைகள் நிகழ்த்தபடுகின்றது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனை போல உள்ளூர் ரவுடிகளும் தாங்கள் இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அழிச்சாட்டியங்கள் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் சிறுவனை  ஒருவர் தந்தையின்  பெயரை கேட்டு தாக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்றது. 

(கோயிலுக்குள் சென்ற சிறுவனை பிடித்து விசாரிக்கும் நபரிடம் - அச்சிறுவன் தாகம் எடுத்ததால் தண்ணீர் குடித்திட கோயிலுக்குள் சென்றதாக சொல்கிறான். மேலும் அவனுடைய பெயரை கேட்கபட்டதற்கு தனது இசுலாமிய பெயரை கூறுகிறான். இதனையடுத்து கோபமடையும் வாலிபன் சரமாரியாக அச்சிறுவனை தாக்குகிறான்.)

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காஜியாபாத் காவலர்கள் அந்த வீடியோவில் வரும் நபரை பிடித்து விசாரிக்கும் பணியினை துவங்கினார்கள். அதில் பாகல்பூரின் எல்லையில் அமைந்த கோபால்பூரை சார்ந்த அஸ்வானி குமார் என்பதும் பீகாரிலிருந்து பிழைப்பிற்காக வந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அவன் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாகத்தின் காரணமாக கோயிலுக்குள் சென்று தண்ணீர் குடித்த சிறுவனை கொலைவெறியோடு நடத்தப்பட்ட விதம் சமூகவலைதளத்தின் மூலம் உலகளாவிய அளவில் பேசுபொருளாகியிருக்கின்றது.

-நவாஸ்

Comments