நாம் தேர்தலுக்கானவர்கள் அல்ல!.. மக்களுக்கானவர்கள் என மீண்டும் நிரூபித்து இருக்கிறோம்!..
மனிதநேய ஜனநாயக கட்சி ஐந்தாம் ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் இறைவனின் உதவியால் அடி எடுத்து வைத்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. சூழ்ச்சிகள்,வஞ்சகங்கள், பொறாமைகள், எக்காலத்திலும் நாம் வளர்ந்து விடக்கூடாது என்ற எதிரிகளின் சதிகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி இறைவனின் உதவியால் இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாகவும்,தமிழக அரசியலை வேறு ஒரு கோணத்தில் பரிணமிக்க வைத்த புதிய முயற்சியை மனிதநேய ஜனநாயக கட்சி செய்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இஸ்லாமிய சமூகத்தை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விடாமல் பொது நீரோட்டத்தில் சமூகத்தை அரசியல்படுத்தியது, உணர்சிகளை தூண்டும் விதமான பேச்சுக்களை, செயல்களை அறவே ஒழித்தது,சேவை அரசியலை முன்னிறுத்தி மக்களின் உள்ளங்களை கவர்ந்தது, அரசியல் தந்திரங்களின் மூலம் நம்முடைய எதிரிகளும் நுனி மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு வியத்தகு அரசியலை செய்தது ஆகியவை மனிதநேய ஜனநாயக கட்சியின் தனிச் சிறப்புகளாகும்.
சாமானிய தொண்டர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு, பக்குவமான தலைமையின் பண்பாடான அரசியல்,பிற அரசியல் கட்சிகளிடத்தில் நமக்கான கண்ணியம், ஆகியவை நம்முடைய கிரீடத்தை மேலும் மெருகேற்றியது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் வைர வரிகளுக்கு ஏற்றார்போல் மாற்று சிந்தனை உள்ளவர்களும் நம்மை நேசிக்கும் அளவுக்கு நம்முடைய பணிகள் பாராட்டப்பட்டு இருக்கிறது என்று சொன்னாள் நாம் உண்மையிலேயே போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரியவர்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம், ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒற்றை உதாரணமாய் கடந்த ஐந்தாண்டுகளில் சட்டப்பேரவையின் அவைகளை தனக்கான வசீகர குரலாலும், தொலைநோக்கு சிந்தனையாகளும், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் வியந்து பார்க்கும் அளவிற்கான பணிகளை இறைவன் உதவியால் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் செய்து முடித்திருக்கிறார் என்பதற்கு சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற விருது சாட்சியம் கூறுகிறது.
சட்டசபையில் யாரும் பேசாத தலைப்புகளை பேசி விவாதப்பொருளாக மாற்றியது,அறிக்கைகளின் மூலம் அரசாணைகளை வெளியிடச் செய்தது, சட்டமன்றத்தின் பதிவேட்டு புத்தகங்களை வரலாற்று பக்கங்களாக மாற்றியது ஆகியவை மக்களிடத்தில் நம்மை பேசுபொருளாக மாற்றியது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்ற கேள்விகளுக்கும்,மக்களின் ஐயங்களுக்கும் வினா அளிக்கும் விதமாக இன்று நாம் வரலாற்று புத்தகத்தில் இடம் அளிக்கும் வகையில் தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றோம்.
இது நமக்கு சிறிய மன வருத்தத்தையும், கவலையுடன் கூடிய கண்ணீரையும் வரவழைத்தாலும் எதிர்கால தூரநோக்கு பார்வை,சமூக நலன்,பாசிஸிட்களின் சூழ்ச்சி,எதிரிகளின் கையாலாகாத தனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாம் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மரத்தின் உச்சிக்கு சென்ற சிட்டுக்குருவி கிளை உடைந்துவிடும் என ஒருபோதும் பயப்படுவதில்லை காரணம் அது கிளையை நம்பி இல்லை சிறகுகள் என்னும் தன்னம்பிக்கையை நம்பி உள்ளது என்ற நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளுக்கு ஏற்ப நாம் சட்டமன்றம் செல்லாவிட்டாலும் மக்கள் மன்றங்களிலும்,மக்களின் மனங்களிலும் நீங்கா இடம் பெற்று இருக்கிறோம் என்பதற்கு சாட்சியம் கூறும் விதமாக இன்றைய நிகழ்வு அமைந்திருக்கிறது.
சூழ்ச்சிகள் செய்தும், பொய் புரட்டுகளை கூறி நாம் அரியணையில் ஏறிய விடக்கூடாது என்று நினைத்த சில கயவர்களின் எண்ணங்களும்,அவர்களின் செயல்களும் தவிடு பிடிகளாகி இறைவனின் உதவியால் மிக விரைவில் இழந்ததை விட சிறந்தது நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு பிறந்திருக்கிறது. கொந்தளிப்பான கடல் தான் சிறந்த மாளுமிகளை உருவாக்கும், அதே போன்று நமக்கு எதிராய் நடக்கும் வஞ்சகமும் சூழ்ச்சியும் இறைவனின் உதவியைக் கொண்டு நமக்கான அங்கீகாரத்தை மேலும் உறுதி செய்துள்ளது.
இந்த நேரத்தில் மனிதநேய சொந்தங்கள் மனம் சோர்வில்லாமல் இன்னும் வீரியமாய் பணி செய்திடவும், நமக்கான களத்தை நாமே உருவாக்கும் சக்தியை இறைவன் நமக்களித்திருக்கிறான் என்ற புத்துணர்வோடும்,புது நம்பிக்கையோடும் நாம் புறப்பட தயாராக வேண்டும். நம்மை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து காட்ட நினைப்பதே எதிரிகளான சம்பட்டி அடி என்பதை நினைவில் கொண்டு கட்சிப் பணியாற்ற வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நமக்கு சட்டமன்றம் வேண்டுமென்றால் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் தமிழகத்தின் மக்கள் மன்றங்கள் நமக்கான ஆதரவு களங்கலாக மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆகவே புது ரத்தம் பாய்ச்சி, புத்துணர்வு ஏற்றி சமுதாய நலன்,தமிழக மக்களின் நலன்,கட்சியின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நம்முடைய எதிர்காலப் பயணங்கள் அமைய வேண்டும். இறைவனின் உதவியால் நம்முடைய தியாகங்களும், உழைப்பும்,கண்ணீரும், வேதனையும் ஒருபோதும் வீணாகி விடாது அது நமக்கான அங்கீகாரத்தை நிச்சயம் பெற்றுத்தரும், இன்று நமக்கு ஒன்று இல்லாமல் போய்விட்டால் அதை விட சிறந்த ஒன்றை இறைவன் நமக்கு அளிப்பான் என்ற நம்பிக்கையோடு புதிய பாதை புதிய பயணத்தில் தொடர்ந்து களமாடுவோம். நாம் காற்றில் உதிர்ந்து விழும் இலைகள் அல்ல, முழு காட்டிற்கும் மணம் வீசும் சந்தன மரங்கள் எனும் புது வரலாற்றை இன்றிலிருந்து எழுதத் தொடங்குவோம்.என்றார்!!! கோவை மாவட்டசெயலாளர் அப்பாஸ்.
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments