வால்பாறையில் பரபரப்பு! - அரசு மருத்துவமனையை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்!!
இதனால் வேதனை அடைந்த தம்பதியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். இரவு 8 மணி வரை வைத்துவிட்டு இங்கு பிரசவம் பார்க்கக்கூடிய வசதி இல்லை எனக் கூறி பொள்ளாச்சி மருத்துவமனைக்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இரவு 8 மணிக்கு மேல் நிறைமாத கர்ப்பிணி சுமார் 64 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம். இந்நிலையில் போகும் வழித்தடத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பனிக்குடம் உடைந்து விட்டதாக தெரிகிறது.
பின்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றடைந்ததும் பரிசோதித்த டாக்டர் கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் காலதாமதத்தால் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முழு காரணம் வால்பாறை அரசு மருத்துவமனை நிர்வாகமும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிர்வாகமும் தான் என குற்றம் சாட்டுகின்றனர். பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு வந்த அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியத்தோடு நடந்து கொண்டதே குழந்தை இறப்பதற்கு காரணம் என்பதால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனிதா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி நேற்று வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையம் முன்பு வால்பாறை முன்னேற்ற இயக்க நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இணைந்து மருத்துவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.-G.திவ்ய குமார், வால்பாறை.
Comments