மாமியார், மனைவி இருவரையும் வெட்டிக் கொன்று கணவன் வெறிச்செயல்!! கடலூரில் பரபரப்பு!

-MMH

                 டலூர் முதுநகர் சலங்கைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ரவி மனைவி பூங்கொடி (48). இவர்களது மகள் மீனா (30). மீனாவுக்கும் அருகிலுள்ள சோனங்குப்பத்தைச் சேர்ந்த நம்புராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருணம் நடந்துள்ளது. அதன்பின்பு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் மீனா தனது தாய் வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நம்பிராஜன், மனைவி, மாமியாரைப் பின்தொடர்ந்து முதுநகர் காவல் நிலையம் அருகே கடைவீதியில் சென்றபோது இருவரையும் சராமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில், இருவரும் பலத்த அலறல் சத்தத்துடன் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதைக் கண்ட நம்புராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.

தகவலறிந்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய நம்புராஜை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ராயல் ஹமீது.

Comments