வால்பாறையில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரிக்கை..!!
வால்பாறை காந்தி சிலை வளாகம் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஆக செயல்பட்டு வருகிறது, இங்கிருந்து வால்பாறை சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பஸ்கள் இயக்கப்படுகிறது இப்பகுதியில் நகராட்சி சார்பில் சிறிய அளவிலான பயணிகள் நிழற்குடை மட்டும் உள்ளது. பயணிகள் நிற்க போதிய இடவசதி இல்லை மேலும் காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ் ஸ்டாண்டில் அமர்வதற்கு வசதியில்லாததால் காந்திசிலை சுற்றிலும் காத்திருந்து பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில்: பத்தாண்டுகளாக இந்த பிரச்சனை பற்றி வலியுறுத்தி வருகிறோம் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பயணிகள் நிழற்குடை அமைத்து தர நகராட்சி நிர்வாகம் கால தாமதம் செய்யாமல் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
-திவ்யா குமார்,வால்பாறை.
Comments