காவலாளி கல்லால் அடித்து கொலை!!

     -MMH

     கோவை  கிணத்துக்கடவு அருகே காவலாளியை அடித்து கொலை. கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் சர்வோதயா சங்கத்துக்கு சொந்தமான காந்தி பண்ணை உள்ளது.

இந்த பண்ணையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தூரம்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 55)  என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் தனது மனைவி சித்ராவுடன் (53) அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலை செய்தார். செல்வராஜ் வழக்கமாக இரவு 10 மணிக்கு அந்த பண்ணையின் மெயின் கேட்டை மூடுவது வழக்கம் அதன்படி இரவு  வீட்டில் இருந்து சைக்கிளில் செல்வராஜ் புறப்பட்டார். 

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சித்ரா, தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சித்ரா தனது பக்கத்து வீட்டாருடன் தனது கணவரை தேடி சென்றபோது அந்த பண்ணையின் கேட் அருகே தலையில் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, துணை போலீஸ சூப்பிரண்டு சீனிவாசலு, கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments