வால்பாறை நகரப்பகுதியில் சிங்கவால் குரங்குகள்!! - பொது மக்கள் அவதி!!
வால்பாறை நகரப்பகுதியில் சர்வ சாதாரணமாக நடைப்பயணம் செல்வது போல் சிங்கவால் குரங்குகள் கடைகளுக்கு செல்வதும், கேபிள் வயர்களில் நடப்பதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மக்களுக்கு தொந்தரவு தரும் விதமாக சிங்கவால் குரங்குகளின் செயல்பாடுகள் இருப்பதால் மக்களை அச்சுறுத்துகிறது.
மேலும் கடைகளில் உள்ள பொருட்களை சர்வசாதாரணமாக எடுத்துச் சென்று விடுகிறது குரங்குகளின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடைக்கு வருவதற்கு பயப்படுகின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். கடை உரிமையாளர்கள் இதைக் கருத்தில் கொண்டு வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு கொண்டு விடும்படி கோரிக்கை வைக்கின்றனர்.
-திவ்யா குமார், வால்பாறை.
Comments