பொள்ளாச்சியில் தவறாமல் ஓட்டுப் போடுமாறு பிரச்சாரம்!!

 

-MMH

             தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற உறுதியோடு அரசும் தன்னார்வலர்களும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,

சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து  அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு வெயிலுக்கு இதமாக தர்பூசணி கீற்றுக்கள்  வழங்கி ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தியான ஓட்டின்  முக்கியத்துவத்தை உணர்த்தியும் தேர்தலில் தவறாமல் ஓட்டுப் போடுமாறு வலியுறுத்தி பிரச்சாரம் செய்தனர். வித்தியாசமான இந்த முயற்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments