கோவை மாவட்ட அரிமா சார்பில் புதிய திட்டமாக,கல்வி மையம் விரைவில் அமையும்!!

 

-MMH 

           கோவை மாவட்ட அரிமா  324 பி 1 சார்பில்  புதிய திட்டமாக பள்ளி,, அனாதை ஆசிரமம்,  கல்வி மையம் விரைவில்  அமைக்க உள்ளதாக சூலூரில் நடைபெற்ற  ஜெயம் மண்டல மாநாட்டின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அரிமா சங்க  324 பி 1 ன்  ஜெயம் மண்டல மாநாடு கோவை சூலூரில் உள்ள அஸ்வினி மகாலில்   நடைபெற்றது.  மண்டலத் தலைவர் பி.எஸ் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக மோகனசுந்தரம் கலந்துகொண்டு நகைச்சுவையான கருத்துகளை எடுத்து வைத்தார். நிகழ்ச்சியில்  மேன்மையை நோக்கி ஆண்டின் மாவட்ட ஆளுநர் ஆர்.என் கருணாநிதி, மாவட்ட முதலாம்  துணை ஆளுநர் நடராஜன்,  இரண்டாம் துணை ஆளுநர்  ராம்குமார் , சிறப்பு விருந்தினராக முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து  மண்டலத் தலைவர் பி.எஸ் செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  கோவை மாவட்ட 324 பி1   லயன்ஸ் கிளப் சார்பில் 11 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சேவைகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்ட 324 பி 1 சார்பில்  புதிய திட்டமாக பள்ளி, அனாதை ஆசிரமம்  கல்வி மையம் அமைக்க உள்ளனர். பள்ளி அமைக்க , எனது தாய், தந்தை நினைவாக ரூ. 5 லட்சம் நிதி வழங்க உள்ளதாக கூறிய அவர்,. ஏழை, குழந்தைகள் படிப்பு, சிறுசேமிப்புக்காகவும்  பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். விழாவில், கேபினெட் செயலாளர்கள் பாஸ்கர், ராஜ் மோகன், பொருளாளர்கள் சீதாராமன், மதிவாணன்,  நிர்வாக அதிகாரி ராஜகோபால், சூலூர்  கிளப் தலைவர் முருகேசன், நிர்வாகிகள் பூபதி, சவுந்தர்ராஜ், அரிமா சங்க மக்கள் தொடர்பாளர்  செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

-சீனி,போத்தனூர்.

Comments