பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்..!!

 

-MMH

      ண்ணிலிருந்து விண்ணுக்கு பாலம் கட்டுவதுபோல் பொய்யான தேர்தல் அறிக்கை மட்டுமே திமுகவில் இடம் பெற்றுள்ளது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம் செய்துள்ளார். பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுகிறார். நேற்று பொள்ளாச்சி கோவை சாலையில் அக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, வரும் தேர்தலிலும் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று துணை சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது, நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் மட்டுமே அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். திமுக தேர்தல் அறிக்கை என்பது மண்ணிலிருந்து விண்ணுக்கு பாலம் கட்டுவது போல் வானளாவிய பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு திமுக தேர்தல் அறிக்கை விடுவார்கள். எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளை மட்டும் அறிக்கையில் இடம்பெற செய்து நிறைவேற்றும் கட்சி அதிமுக. 2006ம் ஆண்டு முதல் திமுக கொடுத்த தேர்தல் அறிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை.

இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள். கையளவு கடுகளவும் தரவில்லை. வாய் வார்த்தைகளால் முடித்துவிட்டார்கள். அதைப்போல் நாடாளுமன்ற தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதிகளை எதையுமே திமுக நிறைவேற்றவில்லை. சொல்வதை எதையும் திமுக செய்வது இல்லை. தற்போது அறிவித்துள்ள முதல்வர் விவசாயக் பயிர்கடன், நகை கடன், சுய உதவி குழு கடன் தள்ளுபடி போன்ற அறிக்கைகள் மத்தியில் திமுகவின் தேர்தல் அறிக்கைகள் எடுபடாது, என்று தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.


Comments