மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி!

 

-MMH

     கோவை  பெரியநாயக்கன்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியானார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி சக்தி நகரில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பத்மநாபன், கணேசன் மற்றும் சாய் சந்துரு மின் இணைப்பு சரி செய்ய அங்கு வந்தனர். அதில் சாய் சந்துரு கையில் உறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென்று அவர் மீது மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்திலேயே சாய்ந்தார்.இது குறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்புத்துறையினர் மின்கம்பத்தில் ஏறி சாய் சந்துருவை மீட்டு பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சாய் சந்துரு  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments