மெயின்ரோட்டில் FC காண்பிக்க நிற்கும் வாகனங்கள்!! - பொது மக்கள் அவதி!!
பொள்ளாச்சி வால்பாறை RTO அலுவலகம் முன்பாக மெயின் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக FC காண்பிக்க வாகனங்கள் வரிசையாக மெயின்ரோட்டில் நின்று கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் RTO நடுரோட்டில் FC பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் சென்றுவிட இடையூறாகவும் உள்ளதால் இந்த வாகனங்களை பரிசோதனை செய்வதற்கு மாற்று வழியாக அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வாகன பரிசோதனை செய்தால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு வராது என்பது குறிப்பிடத்தக்கது.
-திவ்யா குமார்,வால்பாறை.
Comments