முழு ஊரடங்கு தற்போது அவசியம் இல்லை! மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி! பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு முக்கிய உரை!!

   -MMH

     நாட்டில் 2ஆவது கொரோனா அலையால் நாம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம்.

கொரோனாவின் 2ஆவது அலை நாடு முழுவதும் வீசுகிறது. இந்தியா கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை எதிர்கொண்டுள்ளது. கொரோனாவால் உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுகள். உயிர்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் களைப்பின்றி பணியாற்றுகின்றனர். சிக்கலான நேரத்தில் நாம் அனைவரும் பொறுமை இழக்காமல் இருக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பால், மக்கள் படும் துன்பம் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு, தடையற்ற ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உச்ச திறனில் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு விரைந்து அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுவரைக்கு 12 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது.

மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50% நேரடியாக மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக நம்மிடம் மிக வலிமையான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது. ----------என நீண்ட முக்கிய  உரையை பிரதமர்மோடி மக்களுக்கு வழங்கினார்.

-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments