அரசு பேருந்துக்கு ரூ.1000 அபராதம் விதித்த கோவை மாநகராட்சி!!

கோவையில் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் ஆயிரம் பேர் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிகிறார்களா? நடத்துநர், ஓட்டுநர் முகக் கவசம் அணிகிறார்களா? அதிக பயணிகளை ஏற்றி வருகிறார்களா? என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில்  காலை கோவை மாநகராட்சி அதிகாரிகள் உக்கடம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காந்திபுரத்தில் இருந்து சட்டகல் புதூர் செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அதில் பேருந்தில் அதிக பயணிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பேருந்துக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். இந்த அபராதத் தொகையை செலுத்த முடியாது என அரசு பேருந்து நடத்துநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமரசம் பேசியதை அடுத்து, அபராதத் தொகையை நடத்துநர் பின்னர் செலுத்துவதாகக் கூறிபின், பேருந்து கிளம்பிச் சென்றது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-I.அணஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments