12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தா, ஒத்திவைப்பதா என்பது குறித்து பள்ளிக்கல்வி செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் நாள்தோறும் 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திட்டமிட்டபடி தமிழகத்தில் மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வி செயலாளர் இன்று மாலை 3 மணியளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
-சோலை ஜெய்க்குமார், Ln.இந்திராதேவி முருகேசன்.
Comments