தென்னக ரயில்வேயில் 191 வேகன்சீஸ்....நர்சிங், லேப் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.!!
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது PARAMEDICAL STAFF-இல் (Nursing superintendents, physiotherapist, ECG technician, Haemodialysis Technician, Hospital Assistant/ House keeping assistants (Medical), lab assistant, Radiographer) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு மொத்தம் 191 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இவர்கள் தொலைபேசி மூலம் நேர்காணல் நடத்தப்படும். இந்த நேர்காணலில் வெற்றி பெறுவோர் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.srindianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். Nursing superintendents பணிக்கு 83 காலிப்பணியிடங்களும் மாத ஊதியம் ரூ 44,900 வழங்கப்படும்.
அது போல் physiotherapist பணிக்கு 1 காலியிடமும் ரூ 35,400 மாத ஊதியமும் வழங்கப்படும். ECG technician பணிக்கு 4 காலியிடங்களும் ரூ 25,500 மாத ஊதியமும், Haemodialysis Technician பணிக்கு 3 காலியிடங்களும் ரூ 35,400 மாத ஊதியமும் வழங்கப்படும்.
Hospital Assistant பணிக்கு 48 காலியிடங்களும் ரூ18000 மாத ஊதியமும் வழங்கப்படும். அது போல் House keeping assistants (Medical) பணிக்கு 40 காலியிடங்களும் ரூ 18 ஆயிரம் மாத ஊதியமும் lab assistant பணிக்கு 9 காலியிடங்களும் ரூ 21,700 ஊதியமும், Radiographer பணிக்கு 3 காலியிடங்களும் ரூ 29,200 மாத ஊதியமும் வழங்கப்படும்.
Nursing superintendents பணிக்கு பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களும் physiotherapist பிசியோதெரபியில் டிகிரி, ECG technician 10ஆவது, 12 வது, டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்களும், Haemodialysis Technician பணிக்கு பிஎஸ்சி பட்டப்படிப்பு ஹீமோடயாலிசிஸில் டிப்ளமோ படிப்பும் lab assistant பணிக்கு 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ இன் டிஎம்எல்டி படித்தவர்களும், Radiographer 10ஆவது 12 ஆவது டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.
Comments