மே 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கு தேர்தல் முடிவை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!!

   -MMH

மே 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவை அறிவிக்கும் வகையில் பணிகள் நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை  ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த முறையைவிட வாக்கு எண்ணிக்கை நிறைவடைய தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறினார். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா பரிசோதனை தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போதுள்ள கொரோனா  பாதிப்பு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாகவும். கொரோனா காரணமாக வாக்கு எண்ணிக்கையை ஒத்தி வைப்பது குறித்து தற்போது வரை ஆலோசனை நடத்தப்பட வில்லை என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-Vருக்மாங்கதன், சென்னை.

Comments