தமிழகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்!!
மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு.
இரவு நேர ஊரடங்கில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸிக்களுக்கு அனுமதி இல்லை. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து இரவு நேரத்தில் செயல்படாது.
அத்தியாவசிய தேவை மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கு அனுமதி உண்டு. ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் இரவிலும் செயல்படலாம். பெட்ரோல்/டீசல் பங்குகளுக்கு அனுமதி. தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகளுக்கு அனுமதியுடன் செயல்படலாம்.
- சீனி,போத்தனூர்.
Comments