குழந்தை பெற்று 3 மாதமே ஆன பெண் உள்பட 9 பேருக்கு கொரோனா! திருப்பத்தூர் பொதுமக்கள் அச்சம்!
திருப்பத்தூர் பகுதியில் ஒரே நாளில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, சுகாதாரத் துறையினர் ஒவ்வொரு பகுதிகயாகச் சென்று பரிசோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். திருப்பத்தூரில் சமஸ்கான்பள்ளிவாசல் தெரு, நான்கு ரோடு அருகில், சௌமிய நாராயணபுரம், தானிப்பட்டி, தென்மாபட்டு, காளியம்மன் கோவில் தெரு, தட்டட்டி உள்ளிட்ட பகுதிகளில், வெளி மாவட்டங்களுக்குச் சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குழந்தை பெற்று 3 மாதமே ஆன 22 வயது பெண் உள்ளிட்ட 2 பெண்கள்,
7 ஆண்கள் என 9 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத் துறையினர் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் பதற்றத்துடன் காணப்பட்டு வருகின்றனர்.
- அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments