சிங்கம்புணரி பகுதியில் புதிதாக 6பேர்களுக்கு கொரானா! கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது! பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை மும்முரம்!

 

-MMH

     சிங்கம்புணரி பகுதியில் கடந்த 20ஆம் தேதி நான்கு பேருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று, சிங்கம்புணரி அரனத்தங்குண்டு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கும், சிங்கம்புணரி அருகில் உள்ள தேனம்மாள்பட்டி பகுதியில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனம்மாள்பட்டி கிராமத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அக்கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையிலான வருவாய்த் துறையினர், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் சார்பில் நாகலிங்கம் (Zonal BDO) தலைமையிலான ஊரகத்துறை அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி நபிஷா பானு தலைமையிலான சுகாதாரத்துறையினர் (மருத்துவர் பரணிராஜன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் மற்றும் கிராம சுகாதார செவிலியர் மங்கை, ஜெயலட்சுமி மற்றும் செவிலியர்கள்) மற்றும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலர் என 50-க்கும் மேற்பட்டோர் சுகாதார பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்,

மேலும் அந்த கிராமத்தில் முகாமிட்டு கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஒவ்வொரு வீடாகச் சென்று அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 40 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

10 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிராமத்தில் யாருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது என்றும் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேனம்மாள்பட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிராம உதவியாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பில் பணிகள் தரப்பட்டுள்ளன.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments