சமூக இடைவெளி பின்பற்றாததால் பூ மார்க்கெட் இடமாற்றம்!!
கோவை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோவையில் உள்ள பூ மார்க்கெட்டில் 135 கடைகள் உள்ளன. இதில் 28 நிரந்தர கடைகளில் பூ வியாபாரம் செய்யப்படுகிறது. இங்கு நாள்தோறும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இதனால் இங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.
இதன் காரணமாக வியாபாரிகள், பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பூமார்க்கெட் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பூ வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்வதற்கு வசதியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சாஸ்திரி மைதானத்துக்கு மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாஸ்திரி மைதானத்தை பயன்படுத்த வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
-அருண்குமார், கோவை மேற்கு.
Comments