கொல்கத்தா அணியும் சென்னை அணியும் இன்று பலப்பரீட்சையில்!!
ஐதராபாத் அணி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு எதிராக 10 ரன் வித்தியாசத்திலும், பெங்களூருவுக்கு எதிராக 6 ரன் வித்தியாசத்திலும், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 13 ரன் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
கடைசி 2 ஆட்டங்களில் அந்த அணி இலக்கை விரட்டுகையில் 145 ரன்களை கூட தாண்டவில்லை. ஐதராபாத் அணியின் மிடில் வரிசை பேட்டிங் சொதப்பலும், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், டி.நடராஜன் ஆகியோர் சோபிக்காததும் பின்னடைவுக்கு காரணம் .பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் முறையே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், அந்த அணியின் பவுலிங் இன்னும் மேம்பட வேண்டியது அவசியமானதாகும். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்து வீச்சில் பழைய பார்ம் தெரியவில்லை. இதுவரை ரன் மழைக்கு அனுகூலமான மும்பை மைதானத்தில் ஆடிய பஞ்சாப் அணி முதல்முறையாக மந்தமான தன்மை கொண்ட ஆடுகளமான சென்னையில் அடியெடுத்து வைக்கிறது. இங்குள்ள ஆடுகள சூழ்நிலைக்கு தகுந்தபடி திட்டமிட்டு செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.
ஐதராபாத் அணி வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக போராடும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் படுதோல்வி அடைந்த சென்னை அணி, அடுத்த ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை துவம்சம் செய்தது.அதுவும் ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அதிகபட்சமாக பிளிஸ்சிஸ் 33 ரன் எடுத்த போதிலும் ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பால் 188 ரன்கள் வரை திரட்டியது. அதன் பிறகு மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் ராஜஸ்தான் முற்றிலும் நிலைகுலைந்தது. அதே உத்வேகத்துடன் ஹாட்ரிக் வெற்றி பெறும் உத்வேகத்துடன் சென்னை அணி வியூகங்களை தீட்டி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி அதன் பிறகு மும்பை, பெங்களூரு அணிகளிடம் சரண் அடைந்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக தென்பட்ட போதிலும் கொல்கத்தாவின் ஆட்டம் எதிர்பார்த்தபடி ‘கிளிக்’ ஆகவில்லை. தனது முதல் 3 ஆட்டங்களையும் சென்னை சேப்பாக்கத்தில் ஆடிய கொல்கத்தா அணி இந்த ஆடுகளம் புரியாத புதிராக இருப்பதாகவும், ஒருவழியாக இங்கிருந்து கிளம்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார். மும்பை வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்ற போதிலும் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதில் தான் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பு அடங்கியிருக்கிறது.
கொல்கத்தா அணியும் சென்னை அணியும் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன .
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன்
Comments