கேரளாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு!!

     -MMH
     நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட  பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும்  தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுல் படுத்தப் பட்டுள்ள நிலையில்  அண்டை மாநிலமான கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்குக்கு நிகரான கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.  தேவையின்றி வாகனங்களில் சுற்றும் நபர்களை கண்டறிந்து காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இதனால் தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் மெயின் ரோடு பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த மெயின் ரோட்டின் ஒரு பகுதி தமிழகம் இன்னொரு பகுதி கேரளம் என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார்.

Comments