கடைசி கட்ட பிரச்சாரத்தில் கழக முன்னோடிகள் தகிக்கும் வெயிலிலும் அனல் பிரச்சாரம்!!
பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க மற்றும் ம. ம. க. முன்னோடிகள் தீவிர அனல் பறக்கும் பிரச்சாரம். பாபநாசம் தொகுதி தற்பொழுது ஒரு ஸ்டார் விஐபி தொகுதியாக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அண்ணா தி.மு.க சார்பில் கோபிநாதன் அவர்கள் களம் காண்கின்றார். இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்கள் இருவருக்கிடையில் அ.ம.மு.க வும் களத்தில் கணிசமான வாக்குகளை பெறும் என்று நம்பப்படுகிறது.
நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் அவர்களின் தலைமையில் மனித நேய மக்கள் கட்சியினர் கிராமம் கிராமமாக சென்று வாக்குகளை சேகரித்தனர்.
அவர்களுடன் மாநில மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர். அதற்கான ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தஞ்சை பாஷா மற்றும் கோவை மாவட்ட இளைஞரணி செயலாளர் மைதீன் ஆகியோர் செய்து இருந்தனர்
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.
Comments