வாகன டயரில் இருந்து தெறிக்கப்படும் கற்களால் மக்கள் அவதி!!

     -MMH 

     கோவை மாவட்டம் சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனை எதிரில் விஸ்வேஸ்வரா பள்ளி சாலை போடுவதாக கூறி கற்கள் கொட்டப்பட்டு இரண்டு மாதங்களாகியும் அந்த சாலையை போடாத நிலையில் உள்ளது.  

வாகனங்கள் செல்லும் பொழுது சக்கரத்தில் இருந்து தெறிக்கவிடும் கற்கள் குழந்தைகள் மீதும் அந்த சாலையை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் தெறிப்பதால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-நந்தகுமார், ஈசா.

Comments