தரமில்லாத ரேஷன் அரிசி!! - பொதுமக்கள் கவலை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஒக்கிலி பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு தரமில்லாத ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கடை விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்ற காரணத்தால் பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த குடிமைப்பொருள் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரியிடம் கூறுகையில் ரேஷன் அரிசி தரமில்லாமல் வழங்கப்படுகிறது,30 கிலோவுக்கு பில் போட்டு விட்டு 25 கிலோதான் வழங்குகிறார்கள், மளிகை பொருட்கள் வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மிரட்டுகின்றனர். இதுகுறித்துக் கேட்டால் சரியான பதில் இல்லை என்றனர். மேலும் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
-M.சுரேஷ்குமார்.
Comments