பார்வையற்ற பரிதாப அன்னை! தீர விசாரியாது வைது தீர்க்கப்பட்ட வைரல் வீடியோ தாய்!

-MMH

மயூர் செல்கேவால் காப்பாற்றப்பட்ட குழந்தையும் பார்வையற்ற அவன் அன்னையும்.

இல்லாதவர்க்கு இறைவன் ஏதோ ஒரு வடிவில் வந்து இன்னல் தீர்ப்பான். இங்கே மயூர் செல்கே வடிவில். ஆம் , நேற்று ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த   குழந்தையை    மின்னல் வேகத்தில் காப்பாற்றிய ரயில்வே  ஊழியர் மயூர் செல்கேயைப் புகழ்ந்து தள்ளிய இணையவாசிகள் அதே வேகத்தில் குழந்தையின் தாயின் கவனக்குறைவு என்று ஏதேதோ பேசிய பதிவுகளும் பரவலாக வந்தன. 

உண்மையில் அவ்விளம் தாய் பார்வையிழந்தவர். பாவம் , தன் பிள்ளைக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமலே, அவனை அழைத்தபடி நின்றிருந்திருக்கிறார். அது தெரியாத நெட்டிசன்கள் அத்தாயைத் திட்டித் தீர்த்திருந்தனர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மனதுக்குத் தோன்றியதையெல்லாம் பதியாமல் முழுமையாகத்  தெரிந்த நம்பகச் செய்திகளை மட்டுமே பகிர்ந்து மனிதம் காப்போம் உறவுகளே!

-சோலை. ஜெய்க்குமார்,Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments