தடுப்பூசி இல்லாத காலத்தில் உதவியது நிலவேம்பு கசாயம் தான் - பாபுஜி சுவாமிகள்!!
கோவை: கொரோனா தடுப்பூசி இல்லாத காலத்திலும் நிலவேம்பு கசாயம் தான் மக்களுக்கு உதவியது என்றும், மக்கள் நிலவேம்பு கசாயம் பருகே வேண்டும் என்றும் பாபு ஜி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடம் மற்றும் சமூக ஆன்மீக அறக்கட்டளை மற்றும் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி நிலையம் சார்பாக நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கோவை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு வழங்கினார். மேலும், கொரோனா பரவல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், " கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்த காலத்திலும் மக்களுக்கு பயனளித்தது நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் தான், மக்கள் தொடர்ந்து இதனை பருக வேண்டும். கொரோனா காலத்தில் மக்களுக்கு தொடந்து இதனை விநியோகித்துள்ளோம்.
தொற்று பரவல் அரிகரித்துள்ள சூழலில் மக்கள் முககவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும்." என்றார்.
- சீனி,போத்தனூர்.
Comments